தேசிய செய்திகள்

’ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்’ - ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

புதுடெல்லி,

ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்.” என்று தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.