புஷ்கர்,
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கால்நடை கண்காட்சியில், வெறும் 2 அடி உயரமே கொண்ட குட்டி எருமை ஒன்று பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக, புஷ்கர் கண்காட்சியில் பிரம்மாண்டமான எருமைகளும், உயரமான குதிரைகளுமே அதிக அளவில் பங்கேற்கும். ஆனால், இந்த ஆண்டு கண்காட்சிக்கு மராட்டியத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள ‘பிங்கி’ என்ற குட்டி எருமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெறும் 2 அடி உயரத்தில், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அமைதியாகவும் காட்சியளிக்கும் இந்த எருமையை காண சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அலைமோதுகின்றனர். குறிப்பாக, பிங்கியுடன் செல்பி மற்றும் வீடியோ எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மிகவும் அரிய வகை இனத்தை சேர்ந்த இந்த எருமையின் விலை 1 கோடி ரூபாய் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளது கண்காட்சிக்கு வந்தவர்களை வாயடைக்க செய்துள்ளது. 2 அடி எருமைக்கு 1 கோடி ரூபாய் விலை கூறப்படும் தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.