புதுடெல்லி,
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.
இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய 'பெல்லட்' துப்பாக்கிச்சூட்டில் டெல்லியை சேர்ந்த சகில் லோகாப் (வயது 19) என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். அவரது முகம், கண், தோள் என பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
குறிப்பாக வலது கண்ணில் பாய்ந்த ஒரு 'பெல்லட் குண்டு அவரது விழித்திரையை பாதித் தது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குண்டுகள் அகற்றப்பட்டு உள்ளன.
ஆனால் அவரது வலது கண் தற்போது பார்வையை இழந்திருக்கிறது. அவருக்கு மீண்டும் பார்வை திரும்புவதில் நிச்சயமற்றதன்மை இருப்பதாக டாக் டர்கள் தெரிவித்தனர். இது குடும் பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தநிலையில், பெல்லட் குண்டு தாக்குதலுக்கு உள்ளான மாணவரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கல்வி முறையின் சீர்குலைவுக்கு பிரதான் தான் காரணம். போலீசாரின் தாக்குதலில் இளைஞரின் கண் பார்வை பறிபோகியுள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். இளைஞர்களின் எதிர்காலம் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி உள்ளது. பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள் கோரிக்கையாக உள்ளது. மாணவர்களை தாக்கியவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்களை அடிப்பதையும், மிரட்டுவதையும் நிறுத்தி அவர்கள் மீதான தடியடிக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என மத்திய அரசு பொய் கூறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.