தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: பெட்ரோல் பங்குகளில் யு.பி.ஐ. பரிவர்த்தனையை நிறுத்தப்போவதாக அறிவிப்பு

ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை ஏற்கப் போவதில்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

போபால்,

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற உத்தரவையடுத்து மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை அக்டோபர் 16-ந்தேதி முதல் ஏற்கப் போவதில்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்து உள்ளது.

மாநிலத்தில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 700 பெட்ரோல் பங்குகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எம்.டி.ஆர். வரி விதிப்பு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT