தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம் : குடும்ப சண்டையில் கணவனை அடித்தே கொன்ற மனைவி

நீலமை கடுமையாக தாக்கியதற்கு பதிலடியாக, திருப்பி தாக்கியதில் பலத்த காயமடைந்த தீனாதயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாட்னா,

அடிக்கடி சண்டை

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் அன்குர் கிராமத்தை சேர்ந்த தம்பதி தீனதயாள் குஷ்வாகா - நீலம் குஷ்வாகா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு வரும் தீனதயால் தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

மதுபோதை

தீனதயாளுடனான வாழ்க்கை சரியாக இல்லாததால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீலம் சிவநகர் காலனி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். தீன்தயாள் அடிக்கடி மதுபோதையில் மனைவியின் வீட்டிற்கு வருவதாகவும், புகுந்த வீட்டிற்கு திரும்பி வருமாறு வற்புறுத்தி, பல நேரங்களில் தாக்கியதாகவும் கூறினார்.

விவாகரத்து

இதனால், அவர் தீனதயாளிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தீன்தயாள் மீண்டும் மதுபோதையில் வந்து நீலமை கடுமையாக தாக்கினர். இதற்கு பதிலடியாக, நீலம் அவரை திருப்பி தாக்கியதில் பலத்த காயமடைந்த தீனாதயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வழக்கு பதிவு

அதற்கு பின், நீலம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் தகவலை தெரிவித்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், இ்ந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.