மும்பை,
கடந்த ஆண்டு( 2025) மராட்டிய சட்டசபை தேர்தலில் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மராட்டியத்தின் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இந்தநிலையில், மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
* விவசாயிகள் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'புண்யஸ்லோக் அகில்யாதேவி ஹோல்கர்
விவசாயி கடன் நிவாரணத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
* இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ₹2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
* விவசாயிகளுக்குச் சொந்தமாக எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்ற எவ்வித நில வரம்பு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
* இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.