தேசிய செய்திகள்

மராட்டியம்; 24 மணிநேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் பதிவு

தொடர்ந்து 2 மணிநேர இடைவெளியில் ஹிங்கோலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என மனே கூறினார்.

ஹிங்கோலி

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

மராட்டியத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆவுந்த நாகநாத் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தேஷ்வர் மற்றும் தூதலா கிராமங்களில் மதியம் 1.31 மணியளவில் பதிவான அந்த நிலநடுக்கம் ரிக்டரில் 2.5 ஆக பதிவாகி இருந்தது.

எச்சரிக்கை தேவை

இதனால், அந்த பகுதியில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், மண்டல அதிகாரி விகாஸ் மனே கூறும்போது, நிலைமையை அரசு கண்காணித்து வருகிறது. குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதே ஆவுந்த நாகநாத் தாலுகாவுக்கு உட்பட்ட கதலா கிராமத்தில் நேற்று காலை 7.46 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது.

2 மணிநேர இடைவெளி

7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து 2 மணிநேர இடைவெளியில் ஹிங்கோலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என மனே கூறினார்.

கடந்த 1-ந்தேதி அருகேயுள்ள பாங்ரா ஷிண்டே கிராமத்தில் இதேபோன்ற நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த ஜூலை 9 மற்றும் ஜூலை 11 ஆகிய நாட்களில் ரிக்டரில் முறையே 4.6 மற்றும் 3.5 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

SCROLL FOR NEXT