தேசிய செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.5000 - மராட்டிய அரசு அறிவிப்பு

மராட்டியத்தில் 358 தாலுகாக்களில், 265 தாலுகாக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை,

மராட்டியத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.5000 வழங்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

மராட்டியத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்துப் போன தன் காரணமாக, மாநிலத்தின் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

மராட்டியத்தில் கடும் வறட்சி

மரத்வாடா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவு சரிந்து, 3 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. கிணறுகளும் ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டதால். குடிநீருக்காகப் பொதுமக்கள் மைல் கணக்கில் அலையும் அவலநிலை நீடிக்கிறது. சுட்டெரிக்கும் அக்டோபர் வெயிலால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி வாடிக் கருகுகின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பயிர் நஷ்டம் மற்றும் கடன் சுமையால் விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடும் தீவிரமடைந்துள்ளது. வறட்சி நிலைமையைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போதே குடிநீர் டேங்கர்கள் மூலம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வான் பொய்த்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு அதிரடி நிவாரணங்களை அறிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வறட்சியால் தவிக்கும் விவசாயக் குடும்பங்க ளுக்குத் தீபாவளிப் பண்டிகைக் காலப் பரிசாகத் தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

வறட்சி தாலுகாக்கள் 305 ஆக உயர்வு

மராட்டியத்தில் மொத்தமுள்ள 358 தாலுகாக்களில், ஏற்கனவே 265 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், மாவட்ட வாரியாகப் பெறப்பட்ட கூடுதல் புகார்கள் மற்றும் தீவிரக் கள ஆய்வுகளின் அடிப்படையில், தற்போது மேலும் 40 தாலுகாக்கள் வறட்சிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தாலுகாக்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் முழுமையான நிதியுதவி மற்றும் வறட்சி மதிப்பீட்டுக்கான இறுதி நடைமுறை கள் முடிவடைய இன்னும் சில காலம் எடுக்கும். ஆனால், விவசாயிகளின் தற்போதைய அவ சரத் தேவைகளையும், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையையும் கருத்தில் கொண்டு. உடன டியாகத் தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரண முன்பணமாக வழங்க அரசு முடிவு செய் துள்ளது. இந்தத் தொகை எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தான் வறட்சி நிவார ணங்கள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நிலைமையின் தீவிரத்தைக் கருதி அக் டோபர் மாதத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை தீவனம்

வறட்சியால் தவிக்கும் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கிகளோ அல்லது கடன் சங்கங்களோ கட்டாயப்படுத்திக் கடன்களை வசூலிக்கக் கூடாது; விவசாயிகளுக்கு எந்தவித நெருக்கடியும் தரக்கூடாது எனக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மேலும், 3 லட்சம் விவசாயிகளுக்குத் திட்டமிடப்பட்ட கடன் தள்ளுபடி நிதியுதவியும் விரைந்து வழங்கப்படும்.

கால்நடைத் தீவனத் தட்டுப்பாட்டைப் போக்க, விவசாயிகளிடமிருந்து அனைத்துத் தீவனப் பயிர்களையும் அரசே குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT