தேசிய செய்திகள்

மனைவிக்கு சரியாக சேலை அணிய தெரியவில்லை; கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தற்கொலை

தனது மனைவிக்கு சரியாக சேலை உடுத்தவும், பேசவோ, மற்றும் நடக்கவும் தெரியவில்லை என தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் முகுந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் சமாதான் சாபலே (வயது24). இவருக்கு கடந்த ஆறு மாதம் முன்பு தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை (30) திருமணம் செய்து கொண்டார்.

இன்று அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடிதம் இருந்ததை கைப்பற்றினர்.

இந்த கடிதத்தில் தனது மனைவிக்கு சரியாக சேலை உடுத்தவும், பேசவோ, மற்றும் நடக்கவும் தெரியவில்லை. திருமண வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்துது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்