தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

மராட்டியத்தில் இன்று 8,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனா 2-வது அலை பாதிப்பில் முதல் இடத்தில் இருந்து வந்த மராட்டியம் தற்போது மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், மராட்டியத்தில் இன்று மேலும் 8,129 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,17,121 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,12,696 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,732 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,54,003 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,47,354 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.