தேசிய செய்திகள்

மராட்டியம்; தானே நகரில் அமேசான் டேட்டா சென்டர் அமைக்க சரத்பவார் கட்சி எதிர்ப்பு

தானே நகரம் தினசரி 30 மில்லி யன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு தவித்து வருகிறது என்று சரத்பவார் கட்சி நிர்வாகி கூறினார்.

தானே பகுதியில் அமேசான் நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட் டுள்ள புதிய டேட்டா சென்டர் திட்டத்திற்கு தேசியவாத காங்கி ரஸ்(எஸ்.பி.) கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட் டத்தால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு மோசமடைவதோடு, அதிக சத்தத்தினால் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற் படும் என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் எம்.எல்.ஏ. ஜித்தேந்திர அவாத், தானேயில் நிரு பர்களிடம் கூறியதாவது:- தானே நகரில் பொதுமக்களிடம் முறையான கருத்துக்கேட்பு கூட் டம் நடத்தப்படாமல் இந்த அமேசான் டேட்டா சென்டர் திட்டம் திணிக்கப்படுகிறது

ஏற்கனவே தானே நகரம் தினசரி 30 மில்லி யன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு தவித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஒரே ஒரு டேட்டா சென்டருக்காக தினமும் 12 மில்லியன் லிட்டர் தண்ணீரை திருப்பி விடுவதை இந்த நகரத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.

மேலும், இந்த பிரமாண்ட மையம் பால்கும் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக ளுக்கு மிக அருகில் அமைய உள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் 24 மணிநேரமும் தொடர்ச்சியான ஒலி மாசு மற்றும் பல் வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.