தேசிய செய்திகள்

சிஜேபிக்கு ஆதரவாக போராட முயன்ற மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கைது

துஷார் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி நேற்று டெல்லி யில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக அறிவித்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பிற்பகல் 3.30 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கலந்து கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் பாந்திரா பகுதியில் சென்ற அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் டி.என். நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே அங்கு போராட் டம் நடத்த சென்ற துஷார் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக கூறப்படு கிறது.

துஷார் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதேபோல மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT