மலப்புரம்,
மலப்புரம் மாவட்டத்தில் தனக்கு தினமும் உணவு கொடுத்து வந்த ஆமினா என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் கல்லறையை வளர்ப்பு நாய் காவல் காத்த சம்பவம் அந்த கிராம மக்களை நெகிழ வைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த ஆமினாவை யாரும் கவனிக்காத நேரத்தில், நாய் சத்தமாக குரைத்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளது. எனினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளார். மரணமடைந்த பிறகு இறுதி ஊர்வலத்தைப் பின் தொடர்ந்து கல்லறையின் அருகிலேயே அமர்ந்து தனது விசுவாசத்தை வெளிபடுத்தியது. இறந்த பின்னும் பாசம் காட்டும் நாயின் செயலால் அப்பகுதியில் உள்ள மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.