தேசிய செய்திகள்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு- மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

மற்ற கட்சிகளிடம் இருந்து 'ஷாப்பிங்' செய்வதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது என்று கார்கே கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மோடி அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தால், குடும்பங்கள் அழிந்து வரு கின்றன. விலைவாசி உயர்வால் அவர்க ளின் சேமிப்பு வேகமாக கரைந்து வருகிறது. 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்க உயர்வு, உணவுப்பொருள் பணவீக்கம் 4.78 சதவீதம், தக்காளியை வாங்க முடியவில்லை, மருத்துவ பணவீக்கம் 15 சதவீதத்தை தாண்டி விட்டது. ரூபாய் மதிப்பு சரிகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடுகிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.மற்ற கட்சிகளிடம் இருந்து 'ஷாப்பிங்' செய்வதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது. ஆனால், சாமானியர்களுக்கோ அடிப்படை தேவைகளுக்குக்கூட பணம் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.