தேசிய செய்திகள்

அமித்ஷாவின் பேச்சுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

மத்திய உள்துறை மந்திரி இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவது ஏற்புடையது அல்ல என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தில் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் கலவரக்காரர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி இருதார்.

இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவது ஏற்புடையது அல்ல. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன்.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் கலவரக்காரர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.