திருப்பதி,
ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசலு. இவர் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டம். நந்தலூரு வில்ரெயில் எஞ்சின் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் நந்தலூரு அடுத்த நாகிரெட்டி பள்ளியை சேர்ந்த கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை கடந்த 2016- ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் ராஜம்பேட்டை, போயனப்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து சீனிவாசலு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணவேணி தனது கணவரிடம் கடந்த 6 மாதங்களாக தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி வந்தார்.
நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணவேணி கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி க்கொள்ள முயன்றார். அறைக்கு வெளியே இருந்து இதனை பார்த்த சீனிவாசலு சிரித்தபடி சரியாக தூக்கில் தொங்கு என கூறியபடி மனைவி தற்கொலை செய்வதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அப்போது நன்றாக தூக்கு மாட்டிக்க என தெரிவித்தார்.
மனைவி தன் கண்முன்னே தூக்கில் துடிதுடித்து தொங்குவதை கண்டும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை.
கிருஷ்ணவேணி இறந்த பிறகு அக்கம் பக்கம் தனது மனைவி தூக்கில் தொங்குவதாக தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு வந்து கதவை உடைத்து கிருஷ்ண வேணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் கிருஷ்ண வேணியை பரிசோதித்த டாக்டர்கள்' அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசலுவை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் கடந்த 6 மாதங்களாக தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தார். தற்போதும் என்னை மிரட்டுவதற்காக தூக்கில் தூங்குவது போல் நடிக்கிறார் என நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அவர் தூக்கில் தொங்கி இறந்து விட்டார் என தெரிவித்தார். போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கு வதை மனிதாபிமானம் இன்றி வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.