தேசிய செய்திகள்

மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தொழுகையில் இருந்த சராபத் அலி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாஹரன்பூர்,

உத்தர பிரதேசத்தில் தொழுகை செய்து கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம், புட்டாஹேடா கிராமத்தை சேர்ந்தவர் சராபத் அலி (வயது 42). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் உள்ள மசூதிக்கு சென்றார்.

அங்கு, தொழுகை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அருகிலிருந்தவர்கள் சராபத் அலியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மசூதியில் தொழுகையில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். சராபத் அலி மயங்கி விழும்போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மசூதியில் தொழுகை செய்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT