பல்வால்,
ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வால் நகரில் இன்று காலை தொடர்ச்சியாக 6 பேரை இரும்புக்கம்பியால் கொடூரமாக அடித்துக்கொலை செய்த சைக்கோ கில்லரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் என வெறும் 2 மணி நேரங்களில் நடைபெற்றுள்ளது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த கொலைகளை ஒரே நபர் கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர் கொலையில் ஈடுபட்டவர் அங்குள்ள ஆதர்ஷ்நகரில் வைத்து பிடிபட்டார். கைது செய்யும் போது, போலீசாரையும் அந்த நபர் அடிக்க முற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர் கொலையை அரங்கேற்றியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர். இவர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் அவரது பெயர் நரேஷ் என்றும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamillatestnews