ஹூப்ளி,
சபரிமலை சீசன் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரு - கொல்லம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அடுத்த மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மங்களூரு சென்டிரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் மங்களூரு சென்டிரல் - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06231) அடுத்த நாள் (சனிக்கிழமை) காலை 7.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் அடுத்த மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) கொல்லத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் கொல்லம் - மங்களூரு சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06232) அதே நாள் இரவு 9.30 மணிக்கு மங்களூரு சென்டிரல் சென்றடையும்.
18 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில் காசர்கோடு, கண்ணங்காடு, பையனூர், கண்ணூர், தலசேரி, வடகர, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 29) காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.