தேசிய செய்திகள்

மணிப்பூர்: பா.ஜ.க. மூத்த தலைவர் கேம்சந்த் சிங் புதிய முதல்-மந்திரியாகிறார்

டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில், மணிப்பூர் பா.ஜ.க.வின் சட்டமன்ற குழு தலைவராக கேம்சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இம்பால்,

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையால் 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியற்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், தொடர் கலவரம் எதிரொலியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி மணிப்பூர் முதல்-மந்திரி பதவியில் இருந்து பைரன் சிங் விலகினார்.

இதனால், சில நாட்களில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலானது. அது ஓராண்டை நெருங்கியுள்ள நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில மந்திரியான யம்நம் கேம்சந்த் சிங் அடுத்த முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில், மணிப்பூர் பா.ஜ.க.வின் சட்டமன்ற குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய முதல்-மந்திரியாக அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. 60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் 37 உறுப்பினர்களை கொண்டு பா.ஜ.க. பெரும்பான்மையுடன் உள்ளது. இதனால், அவர் புதிய முதல்-மந்திரியாவது உறுதியாகி இருக்கிறது.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது; சபாநாயகருக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

நாட்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை: பியூஸ் கோயல்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை