தேசிய செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல் - ஒருவர் பலி

துப்பாக்கி சூட்டில் கிராம தலைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இம்பால்,

மணிப்பூரில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.

இதனிடையே, மணிப்பூரில் வன்முறை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டபோதும் இனக்குழுக்களுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

பயங்கரவாத தாக்குதல் - ஒருவர் பலி

இந்நிலையில், மணிப்பூரின் கம்ஜங் மாவட்டத்தில் ஷாசத் கிராமத்திற்குள் இன்று மதியம் 2 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கிராமத்தை சேர்ந்த 36 வயதான செய்ஹொஹு என்ற நபர் உயிரிழந்தார். மேலும், கிராம தலைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT