புனே
மராட்டிய சட்டசபையில், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை மாநில உள்துறை தாக்கல் செய்தது. அதில், 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முறையே 48 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதனால், மராட்டியத்தில் 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் வரை காணாமல் போயுள்ளனர்.
எனினும், அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால், 2025-ம் ஆண்டில் 30 ஆயிரத்து 877 பெண்களும், 2024-ம் ஆண்டில் 36 ஆயிரத்து 581 பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இந்த பெண்களில் சிறுமிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 12,113 ஆகவும் மற்றும் 2024-ம் ஆண்டில் 11,313 ஆகவும் இருந்துள்ளது.