தேசிய செய்திகள்

மராட்டியம்: 17 வயது மாணவரை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

கடந்த வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் அவர் டியூசன் வகுப்பில் கலந்து கொண்டு தான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

மும்பை,

மராட்டியம் மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாய் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

டியூசன் வகுப்பு

கடந்த வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் அந்த மாணவர் தனது டியூசன் வகுப்பை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, எந்தவித வெளிப்படையான தூண்டுதலும் இன்றி அந்த மாணவனை வழிமறித்தனர்.

தாக்குதல்

இதனைத்தொடர்ந்து அவர்கள் , அந்த மாணவனை கெட்ட வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் மரக்கம்பால் மாணவனின் தலையில் பலமாகத் தாக்கினர். சுயநினைவை இழப்பதற்கு முன்பு , அந்த மாணவன் உதவிக்கு வந்த வழிப்போக்கர் ஒருவரிடம் தனது செல்போனின் பாஸ்வேர்டு நம்பரைக் கொடுத்துள்ளார். எனவே அந்த வழிப்போக்கர் மாணவரின் தாயைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

சிகிச்சை

இதையடுத்து அவரது தாயார் அங்கு விரைந்து வந்தார். உடனே அவரது மகனை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைக்காக அவர் பின்னர் லாத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சிறுவனின் தாயார் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கைது

இதில் சாஹில் மண்டாலே, ஜிது மண்டாலே மற்றும் ஒரு சிறுவன் என போலீசாரால் அடையாளம் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுள்ளனர்.

மேலும் சாஹில் மண்டாலே, ஜிது மண்டாலே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஒரு சிறுவன் போலீசார் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.