போப் லியோ, பிரதமர் மோடி 
தேசிய செய்திகள்

போப் லியோ விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்: பிரதமர் மோடி வாழ்த்து

போப் லியோவுக்கு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கிறிஸ்தவ மத தலைவர் 14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை

போப் லியோவின் நுரையீரலில் சிறிய முடிச்சு ஒன்று வளர்ந்து உள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கமான பரிசோதனையில் இது ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

புற்றுநோய்க்கட்டி அகற்றம்

இந்த நிலையில், போப் ஆண்டவருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஜெமெலி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், நுரையீரலில் இருந்த புற்றுநோய்க்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

வாழ்த்து

14-வது போப் லியோவுக்கு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிக விரைவில் முழுமையாக குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்."

இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT