மாயாவதி அதிரடி அறிவிப்பு 
தேசிய செய்திகள்

கட்சியில் இனி உறவினர்களுக்கு பதவியில்லை - மாயாவதி அதிரடி அறிவிப்பு

எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சியில் இனி உறவினர்க ளுக்கு பதவி வழங்கப்படாது என்று மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கட்சி பதவி கிடையாது

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபி ரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயா வதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை சமீ பத்தில் கட்சியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று அவர் லக்னோவில் நிருபர்க ளிடம் பேசும்போது கூறியதாவது:-

கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராம் வழியில், எனது சகோதரர்கள், சகோதரிகள், இளம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவி னர்களை எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி உள்ளிட்ட அரசியல் பதவிகளில் இருந்து விலக்கி வைத்திருக்கிறேன். எனது சகோதரர் ஆனந்த் குமாரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த், ஈஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் கட்சியில் எந்த அரசியல் பொறுப்பும் வழங்கப்படாது. இது எனது இறுதி யான முடிவு.

என் சகோதரர் ஆனந்த் குமார் என்னுடன் இருந்து எனக்கு உதவுவது டன், கட்சிப் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் அந்த உறவை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது கட்சிக்கும், பகுஜன் இயக்கத்துக்கும் நல்லதல்ல.

உடல்நிலை குறித்து வதந்தி

எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

கட்சியில் இருந்து 3-வது முறையாக நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த், வீட் டில் இருந்த கட்சிப் பொறுப்பாளர் அலோக் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது உடல்நிலை குறித்து விசாரித்து உள்ளார். அவர் நீக்கப்பட்டபோதும் எனது மாமனாரும் முன்னாள் எம்.பி.யுமான அசோக் சித்தார்த்தின் செல்வாக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT