தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக மேக தாது திட்டத்தை எதிர்ப்பதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நாங்கள் தண் ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் அவர்களுக்கு நீரை வழங்குவோம். நாம் வாழ வேண்டும். அவர்களும் வாழ வேண்டும். அவர்களின் நலன், நமது நலனையும் பார்த்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும். நாங்கள் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு என்ன கோரிக்கை வைக்க வேண்டுமோ, அதை முன்வைப்போம். இதில் எந்த அரசியலும் இல்லை.

காவிரி ஆறு

மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய நீர் ஆணையம் விரைவாக தீர்மானிக்க வேண்டும். மேகதாது அணையில் ஒரு வாளி நீரை கூட பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம். பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வரு கிறது. நாங்கள் கிருஷ்ணா ஆற்றில் இருந்து நீரை கொண்டு வர முடியாது. காவிரி ஆறு ஒன்றுதான் எங்கள் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக மேக தாது திட்டத்தை எதிர்ப்பதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களின் அரசியலில் நாங்கள் தலை யிடுவது இல்லை.

தமிழகத்துக்கு அதிக நன்மை

கடந்த ஆண்டு 400 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு திறந்து விட் டோம். ஆனால் அவை அனைத்தும் கடலில் வீணாக கலந்து விட்டது. மேகதாது அணை திட்டத்துக்கு நாங்கள் நிதி உத வியோ அல்லது வேறு ஏதேனும் உதவியோ தமிழக அரசிடம் கேட்கவில்லை.இந்த திட்டத்தால் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையிலும் கர்நாடகத்துக்கு நன்மை கிடைக்கும். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட் டுக்கு தான் நன்மை அதிகம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் பெங்களூருவில் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத் தப்படும்.

2 மாநில மக்கள் நலன்

மேகதாது திட்டம் தொடர்பாக நான் தமிழக அரசுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். அனைவரும் ஒரே ஆற்றை, ஒரே தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். இருமாநில மக்களின் குடிநீர், பாசன தேவைக்கும், விலங்குகள், கால்நடைகள், தொழிற்சாலை தேவைக்கும் காவிரி நீர் அவசியம். இந்த அணையால் தமிழ் நாட்டுக்கு வறட்சி காலங்களில் தண்ணீர் திறக்க முடியும். மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்த ரவிட்டது. மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறார்கள். 2 மாநில மக்களின்நலனைகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.