தேசிய செய்திகள்

மேகதாது விவகாரம் - பிரதமரிடம் எல்.கே.சுதீஷ் எம்.பி. மனு

விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் சுதீஷ் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் தேமுதிக பொருளாரும் எம்.பி.யுமான சுதீஷ் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷ் கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக விவசாயிகளின் உரிமையை பறிக்கும் நோக்கில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும். தேமுதிக நிறுவன தலைவர் பத்மபூஷன் விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.