கலபுரகி,
கலபுரகி அருகே நடுவானில் பறந்தபோது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் 2 விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் சீனிவாஸ் சரடகி பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பயிற்சி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப் பட்டு சென்றது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு உண்டானது. இதனால் விமா னத்தை தொடர்ந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.மேலும், விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு கொண்டு செல்ல முடி யாத சூழ்நிலை ஏற்பட்டதால், உடனே சுதாரித்து கொண்ட விமானிகள் விமா னத்தை பத்திரமாக தரையிறக்க திட்டமிட்டனர்.அதாவது அவர்கள் விவசாய நிலத்தை அடையாளம் கண்டு விமானத்தை பாது காப்பாக தரையிறக்க முடிவு செய்தனர்.
அதாவது அவர்கள் விவசாய நிலத்தை அடையாளம் கண்டு விமானத்தை பாது காப்பாக தரையிறக்க முடிவு செய்தனர்.அதன்படி, கலபுரகி புறநகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பயிற்சி விமானத்தை அவசரமாக தரையிறக்கி னர். விமானிகளின் சாதுர்யமான நடவடிக்கையால் விமானம் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டதுடன், அவர்களும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதற்கிடையே விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதை பார்த்த தும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் தகவல் அறிந்து சம் பவ இடத்துக்கு விரைந்து வந்த கலபுரகி புறநகர் போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமானவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பயிற்சி விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதற்கான சரியான கார ணம் என்ன என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விவசாய நிலத் தில் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.