திஸ்பூர்,
அசாமின் சோனித்பூர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.43 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
17 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.950 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.638 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
முன்னதாக , நேற்று அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.9 அளவிலும், மராட்டியத்தில் ரிக்டர் 3.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.