எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையான முறையில் சில முடிவுகளை குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்த நிலையில், ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஞானேஷ் குமாரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
முதலில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பதிலைப் பெற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே கோர்ட்டு செயல்படும் என்றும், ஆனால் ஏதேனும் முடிவு சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், அந்த முடிவுகளை ரத்து செய்ய முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் சர்ச்சையும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.