தேசிய செய்திகள்

முகம்மது ஷமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்: ராகுல் காந்தி டுவிட்

20 ஓவர் உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது.

புது டெல்லி,

துபாயில் 20 ஓவர் உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஆட்டத்தில், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்ட்தான் அணி. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்திருந்தார். இந்தியாவின் இந்த தோல்விக்கு ஷமிதான் காரணம் என பலரும் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு யாரும் அன்பைத் தரவில்லை. அவர்களை மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT