தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கனமழை: சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஒத்திவைப்பு

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய சட்டசபை

இந்நிலையில், கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ராகுல் நர்விகர் தெரிவித்துள்ளார்.