ம.பி., கள்ளச்சாராய விவகாரம் 
தேசிய செய்திகள்

ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்​திய பிரதேசத்​தின் சாகர் மாவட்​டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்​கள் பலர் சில தினங்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்​ளச்​சா​ர​யத்தை வாங்கி குடித்​துள்​ளனர். இதையடுத்​து, அவர்​களுக்கு குமட்​டல், வாந்தி போன்ற உடல் உபாதை ஏற்​பட்​டுள்​ளது. அவர்​களை குடும்​பத்​தினர் உடனடி​யாக பண்டா சிவில் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். இதே​போல அரு​கில் உள்ள 2 கிராமங்​களில் இருந்​தும் இதே பிரச்சினையுடன் பலர் அந்த மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு சேர்ந்​தனர்.

பின்​னர் அவர்​கள் அனை​வரும் மேல் சிகிச்​சைக்​காக புந்​தேல்​கண்ட் மருத்​து​வக் கல்​லூரிக்​கும், சாகரில் உள்ள மாவட்ட மருத்துவ​மனைக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டனர். அங்கு அவர்களுக்கு மருத்​து​வர்​கள் தீவிர சிகிச்சை அளித்​த​போ​தி​லும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர்.

இந்த நிலையில், பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 32 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்டவர்கள் சாகர் கோல்ட் எனும் மதுபானம் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்​தச் சம்​பவம் குறித்து நீதித்​துறை விசா​ரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாநில முதல்​-மந்திரி மோகன் யாதவ்.

SCROLL FOR NEXT