மசாலா தோசை 
தேசிய செய்திகள்

மும்பை: மசாலா தோசையில் இறந்த எலி - ஹோட்டல் உரிமம் தற்காலிகமாக ரத்து

மும்பையில் அமித் திரிவேதி என்பவர் ஆர்டர் செய்த மைசூர் மசாலா தோசைக்குள், முழுதாகச் சமைக்கப்பட்ட நிலையில் செத்த எலி கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

மும்பை,

மும்பையில் மசாலா தோசைக்குள் செத்த எலி கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

பிரபல ஓட்டல்

மும்பையை சேர்ந்த அமித் திரிவேதி என்பவர், தனது 2 சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவுகளை ருசித்து சாப்பிடுவதற்காக அங்குள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றுள்ளார். விடுமுறை நாளில் குடும்பத்துடன் ஜாலியாக சாப்பிட சென்ற அவர்களுக்கு, அங்கு ஒரு சமையல் காராசாரமான அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

எலி தேசை

அவர்கள் ஆசை ஆசையாக ஆர்டர் செய்த மைசூர் மசாலா தோசைக்குள், முழுதாக சமைக்கப்பட்ட நிலையில் செத்த எலி கிடப்பதை கண்டு அவர்கள் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போயினர்.பாதிக்கப்பட்ட அமித் திரிவேதி உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள போரிவலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உரிமம் ரத்து

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உணவில் சுகாதார குறைபாடு இருந்தது உறுதியானதை அடுத்து, ஓட்டலின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மூடினர்.

SCROLL FOR NEXT