தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

கொட்டித்தீர்த்த கனமழையால் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மராட்டியத்தில் கனமழைக்கு 15 பேர் உயிரிழந்தனர்.

மும்பை, .

மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்க்கும் கனமழையால் மும்பை நகரே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு குர்லா பகுதியில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இதேபோல இரவில் மான்கூர்டில் 3 மாடி வீடு இடிந்து விழுந்து 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் மும்பையில் பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே நகரில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நகருக்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கை நேற்று காலை 'ரெட் அலர்டாக' மாற்றப்பட்டது. அதற்கேற்ப நகரில் இடைவிடாமல் மழை கொட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 13 செ.மீ., மழையும், புறநகர்ப்பகுதிகளில் 16 செ.மீ. மழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

விமான சேவை பாதிப்பு

மும்பையில் அந்தேரி சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கியதால் மூடப் பட்டது. பலத்த மழை காரணமாக நேற்று நகர் முழுவதும் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய் ததால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மழை காரணமாக நேற்று மும்பையில் பல தனியார் நிறுவனங்கள் மதியத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தன. இதேபோல அவச ரகால பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் ½ நாள் விடுமுறை விடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிக மாக பாதிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் வரை மும்பை வர வேண்டிய ராய்ப்பூர், சிங்கப்பூர், டெல்லி, கொல்கத்தா மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களின் 5 முக்கிய விமானங்கள் ஐதராபாத், டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.