தேசிய செய்திகள்

மராட்டியம்: கோர்ட்டு வளாகம் அருகே இளைஞர் மீது துப்பாக்கி சூடு, கொடூர தாக்குதல்

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் கோர்ட்டு வளாகம் அருகே இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் சிவாஜிநகர் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சுபம் சவான் என்ற நபரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மண்டர் கிவாலிக்கு கோர்ட்டு கடந்த சில நாட்களுக்குமுன் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, ஜாமின் நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மண்டல் கிவாலி இன்று சிவாஜிநகர் கோர்ட்டிற்கு வந்தார்.

கொடூர தாக்குதல்

கோர்ட்டு வளாகம் அருகே உள்ள சாலையில் மண்டல் கிவாலி சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வேகமாக வந்த கும்பல் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தியும், அரிவாளால் வெட்டியும் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மண்டல் கிவாலியின் கை துண்டானது. இந்த தாக்குதல் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த கிவாலியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிவாலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மேலும், தாக்குதல் நடத்திவிட்டு பைக்குகள் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT