அமராவதி,
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பம்பனூர் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது வினோத சம்பவம் ஒன்று அரங்கேறியது.
கோவில் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ணியபோது, ரூ.20 நோட்டில் “சுவாமி, என் அத்தையின் தொல்லையை என்னால் தாங்க முடியவில்லை. அவர் விரைவில் இறந்துவிடும்படி பார்த்துக்கொள்ளுங்கள்” என எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வினோத வேண்டுகோளை பார்த்த கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் உண்டியலில் இவ்வாறு தனிப்பட்ட கோரிக்கைகள் எழுதப்பட்ட நோட்டுகள் கிடைப்பது அரிதானது என்பதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.