புது டெல்லி,
இனிய இமாச்சல் தின நல்வாழ்த்துக்கள் 1948 ஏப்ரல் 15 அன்று 30 சிறிய சமஸ்தானங்களை இணைத்து, தேவ் பூமி எனப்படும் இமாச்சல பிரதேசம் உருவானதை இந்த நாள் நினைவுகூருகிறது. பனி மலைகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் துணிச்சலை இந்த மாநில விழா கொண்டாடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இமாச்சல பிரதேசம் தின நல்வாழ்த்துக்கள் இமாச்சல மக்கள் அனைவருக்கும். தெய்வங்களின் புனித பூமியான இது, அதன் வளமான பாரம்பரியங்கள். ஈடு இணையற்ற கலாச்சாரப் பாரம்பரியம், மற்றும் இங்குள்ள மக்களின் விடாமுயற்சி, கடமையுணர்வு, பணிவு ஆகியவற்றால் ஒரு சிறப்பு அடையாளத்தை பெற்றுள்ளது.
இந்த மங்களகரமான நாளில், மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.