தேசிய செய்திகள்

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா

டாடா சன்ஸ் நிறுவனம் இதுவரை சந்திரசேகரனின் ராஜினாமா குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மும்பை,

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்த என். சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், சந்திரசேகரனின் ராஜினாமா செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விரைவில் வெளியாகும்

சந்திரசேகரன் திடீரென ராஜினாமா செய்து இருப்பதால், டாடா குழுமத்தில் எதிர்பாராத வகையில் புதிய தலைமை மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த ராஜினாமா குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை வீழ்ச்சி

டாடா சன்ஸ் நிறுவனம் இதுவரை சந்திரசேகரனின் ராஜினாமா குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், டாடா பவர் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. பெரும்பாலான டாடா குழுமப் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.