தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய மாநாடு

மாநாட்டிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் தலைமை தாங்குகிறார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நீர்வளத் துறைகளின் மூத்த செயலாளர்களுக்கான அகில இந்திய மாநாடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் உள்ள சாணக்யா அரங்கில் நடக்கிறது. மாநாட்டிற்கு , மத்திய ஜல் சக்தித்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் தலைமை தாங்குகிறார்.

நீர்வளத் துறையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்முயற்சிகள், நீர்வள திட்டங்களில் மத்திய- மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், ஜல் சக்தி அமைச்சகத்தின் முக்கிய தேசிய திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நீர்வளத் துறை செயலாளர்கள், மத்திய ஜல் சக்தி அமைச்சக அதிகாரிகள், மத்திய நீர் ஆணைய அதிகாரிகள், தேசிய அணை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.