புதுடெல்லி,
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992-ம் ஆண்டு இயற்றப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 1993-ம் ஆண்டு ஏப்.24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது. முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகள். பொதுச்சேவையிலும் தேசிய சேவையிலும் உங்கள் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.