தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.பி. கார் மீது வாகனம் மோதல்

ஒவ்வொருவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

புனே

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) பெண் எம்.பி. சுப்ரியா சுலே பயணித்த கார் மீது அடையாளம் தெரியாத நபரின் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மராட்டியத்தின் புனே நகரில் இருந்து மும்பை நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு விரும்பத்தகாத அனுபவம் ஏற்பட்டது. ஜி.ஜே.13.சி.எப்.5257 என்ற எண் கொண்ட வாகனம் ஒன்று பக்கவாட்டில் வந்து எங்களுடைய கார் மீது மோதியது.

அதிர்ஷ்டவசத்தில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அதிவிரைவாக செல்வது மற்றும் அலட்சியம் ஆகியவை நம்முடைய சாலைகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு பலருடைய வாழ்வை ஆபத்தில் தள்ளி விடுகிறது.

ஒவ்வொருவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும். இதனால், நம்முடைய நெடுஞ்சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என்று எம்.பி. கூறினார்.