திருப்பதி ஏழுமலையான் கோவில் 
தேசிய செய்திகள்

திருப்பதியில் இந்த மாதம் 10 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

நவராத்திரி பிரம்மோற்சம் மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் ஆகியவை இணைந்து வருவதால், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்வம் நடைபெற உள்ளது. புரட்டாசி கடைசி வாரத்தில் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும் பிரம்மோற்சவ காலத்தில் பக்தர்களின் வசதிக்காக 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்கும். தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://ttdevasthanams.ap.gov.in முன்பதிவு செய்யும்படி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

விஐபி பிரேக் தரிசனம் ரத்து

நவராத்திரி பிரம்மோற்சம் மற்றும் புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம் ஆகியவை இணைந்து வருவதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விஐபி பிரேக் மற்றும் சிறப்பு தரிசனங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ரத்து செய்துள்ளது:

சிறப்பு தரிசனங்கள்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மற்றும் ராணுவத்தினர் ஆகியோருக்கான சிறப்பு தரிசனங்கள் இக்காலகட்டத்தில் ரத்து செய்யப்படுகின்றன.

அக்டோபர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, 'புரோட்டோகால்' (Protocol) அந்தஸ்தில் உள்ள விஐபிக்களைத் தவிர, மற்றவர்களிடமிருந்து விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.

பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு திருமலை பயணத்தை திட்டமிடுமாறும், நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT