AI 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ரூ. 1 ஆயிரத்து 745 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை,

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 1 ஆயிரத்து 745 கோடி ஆகும். சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின்போது மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை விசாரணை நடத்தி வருகிறது. ரூ. 1 ஆயிரத்து 745 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.