தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் சோகம்: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபார். இவரது மகன் அப்துல் ரியான் (வயது 20). ரியான் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த ஜுன் மாதம் நீட் தேர்வு எழுதிய அப்துல் ரியான் அத்தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால், அவர் மருத்துவ படிப்புகளுக்கு சேர முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், அப்துல் ரியான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

மாணவன் தற்கொலை

இந்நிலையில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் அப்துல் ரியான் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் அப்துல் ரியான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று அப்துல் ரியானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT