தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு: கைதான பெண் பேராசிரியைக்கு 14 நாட்கள் சி.பி.ஐ. காவல்

வினாத்தாளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கான மறுதேர்வு வருகிற ஜூன் 21-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 9 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதில் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் தாவரவியல் பேராசிரியர் மனீஷா குருநாத் மந்தாரேவை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.மேலும், மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. அதேபோல், வினாத்தாளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.