தேசிய செய்திகள்

'நீட்' வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா இன்று தாக்கல்

தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களை, 10 ஆண்டுகள் ஜெயிலுக்கு அனுப்ப வகை செய்யும் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் ஆகிறது.

மந்திரிசபை ஒப்புதல்

நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவ காரம் ஒரு மந்திரியின் தலையை உருட்டி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக போராடி வந்த நிலையில் பிரதமர் மோடி, எதிர் வரும் காலங்களில் தேர்வு முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவது பற்றி கடந்த 23-ந் தேதி காணொலி வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 24-ந்தேதி அந்த சட்ட (திருத்தம்) மசோதாவுக்கு அவரது தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

10 ஆண்டு ஜெயில்

2024-ம் ஆண்டின் "பொதுத் தேர்வுகள் முறைகேடுகளைத் தடுத்தல்" என்ற பழைய சட்டம், பல திருத்தங்களுடன் பொதுத் தேர்வுகள் (முறை கேடுகளைத் தடுத்தல்) சட்டம்-2026" என்ற பெயரில் வருகிறது. இந்த புதிய மசோதா, தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது.

இன்று அறிமுகம்

முக்கியமான இந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (திங் கட்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டு, உடனே விவாதிக்கவும், நிறைவேற்ற வும் வலியுறுத்தப்படுகிறது.பிரதமர் அலுவலக இணை மந்திர ஜிதேந்திரசிங் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற முன்மொழிகிறார். இதுகுறித்த குறிப்புகள் மக்களவை அலுவல் பட்டியலில் வெளியாகி இருக்கிறது.