புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிர்த்து மெசேஜிங் செயலியான டெலிகிராம் (Telegram) டெல்லி ஐகோர்ட்டை அணுகியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக டெலிகிராம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என டெலிகிராம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை டெல்லி ஐகோர்ட்டு (Delhi High Court) ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து டெலிகிராமின் மனு மீது டெல்லி ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டிஜிட்டல் தளங்களின் பொறுப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்தக்கூடும் என சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன.