குஷிநகர்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி, இதுவரை உத்தர பிரதேச ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 13 உடல்கள் மீட்கப்பட்டன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில், கோஷி ஆற்றில் பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3,000 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கோஷி ஆற்று வெள்ளம் இந்தியாவிற்குள் வந்துள்ளது. இதனால், ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் இந்தியாவிற்குள் வந்துள்ளன. இதன்படி, உத்தர பிரதேசத்தில், குஷிநகர் மாவட்டத்தில் பாய்ந்தோடும் கந்தக் ஆற்றில் இருந்து நேற்று 4 உடல்கள் மீட்கப்பட்டன.
அவற்றில் 2, ஆண்களின் சடலங்கள். 2 பெண்களின் சடலங்கள் ஆகும். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்திய எல்லைக்குள் அவை அடித்து வரப்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனால், 4 நாட்களில் இதுவரை மொத்தம் 13 உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. உத்தர பிரதேச மாநில பேரிடர் மீட்பு படை, மீட்பு பணியின்போது ஆற்றில் இருந்து அவற்றை மீட்டுள்ளன.