டெல்லி,
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நாளை மறுதினம் இந்தியா வர உள்ளார்.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட பாலேந்திர ஷா வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நேபாள பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷா முதல் முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நேபாளத்தில் இருந்து விமானம் மூலம் நாளை மறுதினம் டெல்லி வரும் பாலேந்திர ஷா இந்திய அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.